கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணை தொடங்கியுள்ளதாக சிறப்பு புலனாய்வு குழுவின் தலைமை அதிகாரி, ஐஜி அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.
கரூரில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், வழக்கை விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், கரூரில் சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் விசாரணையை தொடங்கிய ஐஜி அஸ்ரா கார்க், தற்போது முதற்கட்ட விசாரணை தொடங்கியிருப்பதாகவும், மற்ற விவரங்கள் விசாரணைக்கு பிறகு தெரியவரும் என்றும் தெரிவித்துள்ளார்.