ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெடித்த போராட்டத்துக்கு தீர்வு காண ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ள காஷ்மீரில் அரசின் தவறான நிர்வாகம், ஊழல் உள்ளிட்டவற்றை கண்டித்து, அங்கு வசிக்கும் மக்கள் நீண்ட நாட்களாக போராடி வந்தனர். கடந்த செப்டம்பர் 29ம் தேதி வெடித்த வன்முறையில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து போராட்டக்காரர்களின் பிரதிநிதி குழுவுடன் இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதை தொடர்ந்து போராட்டக்காரர்களின் 38 அம்ச கோரிக்கைகளில், 25 கோரிக்கைகள் ஏற்கப்பட்டது. இதனையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.