மேற்குவங்கத்தில் பெய்துவரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஜல்பய்குரி, ராஜ்கஞ்ச், சிலிகுரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.
இதனால் ராஜ்கஞ்ச் வட்டத்தின் பொராஜ்ஹார் பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் மழை வெள்ளம் சூழ்ந்தது.
இதையடுத்து, வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை தேசிய மீட்புப் படையினர் மீட்டு வருகின்றனர்.
ஒரு சிலர் தங்கள் உடமைகளை எடுத்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்கின்றனர். இதேபோல் கனமழையால் அங்குள்ள துதியா இரும்பு பாலம் இடிந்து விழுந்ததால் சிலிகுரி-டார்ஜிலிங் சாலையில் வாகனப் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகப் பல தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் இணைப்புச் சாலைகளும் மூடப்பட்டுள்ளன.