உலகின் குருவாக இந்தியா திகழ வேண்டும் என்ற நோக்கத்தில் ஆர்.எஸ்.எஸ் செயல்பட்டு வருதவதாக அந்த இயக்கத்தின் தென் தமிழக இணைச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
காட்டூர் ஜயப்பன் கோயில் வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா மற்றும் விஜயதசமி கொண்டாட்டம் நடைபெற்றது.
மருத்துவர் விஜியகிரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தமிழக இணைச்செயலாளர் பிரபுச் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர் உலகின் குருவாக இந்தியா மாற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு மட்டுமே ஆர்.எஸ்.எஸ் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.