நாமக்கல்லில் மறைந்த பாஜக மாவட்ட முன்னாள் தலைவரின் திரு உருவ படத்திற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் மரியாதை செலுத்தினார்.
பாஜக முன்னாள் தேசிய செயற்குழு உறுப்பினரும், மாவட்ட தலைவருமான மனோகரன் என்பவர், கடந்த மாதம் 30ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாமக்கல்லில் உள்ள இல்லத்திற்கு சென்ற மத்திய அமைச்சர் எல்.முருகன், மனோகரனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு அங்கு வைக்கப்பட்டு இருந்த திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.