கிருஷ்ணகிரி நகர் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படாததால் ஒருநாள் மழைக்கே வெள்ளம் சூழ்ந்து காணப்படுவதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி நகர் பகுதியில் இரவில் கனமழை பெய்ததால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால், குடியிருப்புவாசிகள் மற்றும் வணிகர்கள் அவதிக்குள்ளாகினர்.
கிருஷ்ணகிரி நகரப் பேருந்து நிலையத்தில் இரண்டடி உயரத்திற்கு மழைநீர் குட்டைபோல் தேங்கியதால் பேருந்துகள் உள்ளே செல்ல முடியாமல் வழியிலேயே திருப்பி விடப்பட்டதால், பயணிகள் இன்னலுக்கு ஆளாகினர்.
கிருஷ்ணகிரி பழையபேட்டை ஆசிப் நகரில் 4 அடி வரை தண்ணீர் தேங்கிய நிலையில், மோட்ரூர் பகுதியில் கனமழை காரணமாக 3 வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன.
இதேபோல், நகரின் பல்வேறு இடங்களில் சாக்கடை அடைப்பு காரணமாகச் சாலைகளிலும் தெருக்களிலும் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.