டெஸ்ட் போட்டிகளில் அஸ்வினை கண்டிப்பாக மிஸ் செய்கிறோம் என ஜடேஜா தெரிவித்துள்ளார்.
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 140 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என இந்தியா முன்னிலையில் உள்ளது.
போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் பேசிய ஆட்டநாயகன் ரவீந்திர ஜடேஜா, டெஸ்ட் போட்டிகளின்போது அஸ்வின் பந்து வீச வேண்டும் எனத் தோன்றும் எனவும், ஆனால் அவர் அணியில் இல்லை என்பதை உணர்வேன் எனவும் உருக்கமாகக் கூறியுள்ளார்.