நடிகர் பாலா நடிப்பில் வெளியான காந்தி கண்ணாடி திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது.
வறுமையில் வாடுபவர்களுக்கு உதவுவதன் மூலம் சமூக வலைதளங்களில் பிரபலமானவர் பாலா. இவருக்கு இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
இவர் இயக்குநர் ஷெரிப் இயக்கத்தில் நடித்த காந்தி கண்ணாடி திரைப்படம் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிக் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்நிலையில் காந்தி கண்ணாடி திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகிக் கவனம் ஈர்த்துள்ளது.