ஒலியை விட 6 மடங்கு அதிவேகத்தில் பறக்கக்கூடிய dhvani என்ற புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையை நடப்பாண்டு இறுதிக்குள் சோதிக்க DRDO அமைப்பு திட்டமிட்டுள்ளது.
பாதுகாப்புத் துறையில் தற்சார்பை நோக்கி முன்னேறி வரும் இந்தியா, மேம்பட்ட ஏவுகணை அமைப்புகள், போர் விமானங்கள் மற்றும் ட்ரோன் திட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, ஹைப்பர்சோனிக் ஏவுகணை (Hypersonic Missile) பரிசோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) உருவாக்கி வரும் Dhvani ஹைப்பர்சோனிக் ஏவுகணை இந்த ஆண்டிற்குள் பரிசோதிக்கப்படும் என DRDO அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மணிக்கு 7,000 கிலோ மீட்டருக்கும் மேல் பாயும் திறன் கொண்ட dhvani ஹைப்பர்சோனிக் ஏவுகணை, 1,500 முதல் 2,000 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளை நிமிடங்களில் தாக்கும் திறன் பெற்றதாகக் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.