மதம் மற்றும் மொழி வேறுபாடுகளைத் தாண்டி அனைத்து இந்தியர்களும் ஒன்றுபட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தியுள்ளார்.
மத்தியப் பிரதேசம் மாநிலம் சத்னாவில் நடைபெற்ற சிந்தி காம்ப் குருத்வாரா திறப்பு விழாவில் கலந்து கொண்ட அவர், இந்தியர்கள் அனைவரும் ஒன்றுபட்டு, நாட்டின் ஆன்மீக பாரம்பரியத்தை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நம்மைப் பிரித்து ஆட்சி செய்தோடு, நம்முடைய ஆன்மீக உணர்வை பறித்து, பொருளாதார ஆசைகளை ஏற்படுத்திவிட்டதாக விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆசை மற்றும் பேராசையால் தம்முடைய தர்மத்தை விட்டு விடக் கூடாது என்றார்.
மேலும், உண்மையான சுதந்திரத்தை அடைய, ஆன்மீக அறிவை அன்றாட வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், இந்தியா உலகிற்கு அமைதியும் செழிப்பும் கற்பிக்கக்கூடிய நாடு என்றும் கூறினார்.