தர்மபுரியில் சுகாதாரம் இல்லாத பூங்காவால் பொதுமக்கள் அவதியடைகின்றனர். தர்மபுரி நான்கு ரோடு அருகே சிறுவர் பொழுதுபோக்கு பூங்கா உள்ளது.
மேலும் அருகிலேயே ஆவின் ஜங்ஷன் அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் பொதுமக்கள் அமர்ந்து ஓய்வெடுப்பதோடு ஆவின் ஜங்ஷனில் சிறுவர்கள் ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றை வாங்கி வந்து பூங்காவிற்குள் அமர்ந்து சாப்பிடுகின்றனர்.
இந்நிலையில் பூங்கா முன் இருக்கும் சாக்கடை கால்வாயில் இருந்து பூங்காவிற்குள் கழிவுநீர் வெளியேறிச் சுகாதாரமற்று காணப்படுகிறது.
இதனால் அங்கு வருவோருக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.