திமுக அரசுத் தோல்வி பயத்தில் பத்திரிக்கையாளர்கள் மீது வன்மத்தை திணிக்கிறது என மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள முகாம் அலுவலகத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகனை சந்தித்து புதிதாகப் பொறுப்பு வழங்கப்பட்ட பாஜக நிர்வாகிகள் வாழ்த்து பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து, நீலகிரி மற்றும் கோவை மாவட்ட நிர்வாகிகளுடன் கட்சி சார்ந்த ஆலோசனைகளை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், ஆளுநர் விவகாரத்தில் தமிழ அரசு அரசியல் செய்வதாகவும், திமுக செய்யும் ஊழல்களுக்குத் தடையாக இருப்பதால் ஆளுநரிடம் வேண்டுமென்றே தவறான கோப்புகளை அனுப்பி பிரச்னை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
கரூர் சம்பவம் தொடர்பாகத் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அமைக்கப்பட்ட குழு அறிக்கை அளித்துள்ளதாகவும் கூறினார்.
மேலும், அரசுக் கேபிள் நெட்வொர்க்கில் இருந்து தமிழ் ஜனம், புதிய தலைமுறை தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் மறைக்கப்பட்டு வருவதாகவும், இந்தப் போக்கு எமர்ஜென்சி காலகட்டத்தை ஞாபகப்படுத்துவதாகவும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.