மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இலங்கையின் கொழும்புவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஹர்லின் தியோல் 46 ரன்னும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 32 ரன்னும், பிரதிகா ராவல் 31 ரன்னும் எடுத்தனர்.
கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 20 பந்தில் 2 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 35 ரன்கள் அடித்து அசத்தினார்.
இதையடுத்து, 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 43 ஓவரில் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன்மூலம் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்பெற்றது.