திண்டுக்கலில் ‘காந்தாரா’ வேடத்தில் திரையரங்கில் நடனமாடிய ரசிகரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
காந்தாரா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரிஷப் ஷெட்டி, அதன் அடுத்த பாகமாக ‛காந்தாரா சாப்டர் 1′ படத்தை இயக்கி, நடித்திருந்தார்.
இப்படம் கடந்த அக்டோபர் 2ம் தேதி ரிலீசாகி அமோக வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாகக் கன்னடத்தில் வெளியான படம் தமிழ், தெலங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நல்ல வசூலை குவித்து வருகிறது.
இந்நிலையில், திண்டுக்கல்லில் உள்ள திரையரங்கிற்கு ரசிகர் ஒருவர் காந்தாரா வேடத்தில் வந்தார். அப்போது, இருக்கைகளில் அமர்ந்திருந்த பொதுமக்கள் மத்தியில் காந்தாரா படத்தின் “கதாபாத்திரமாக” நினைத்து நடனமாடினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.