அமெரிக்காவில் உணவகத்தில் வேலை பார்த்து வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் உணவகத்திற்கு வெளியே நடந்த சண்டையை விலக்கி விட முயற்சித்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.
பிட்ஸ்பர்க் நகரில் உள்ள உணவகத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ராகேஷ் ஏகபன் என்பவர் மேலாளராகப் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் உணவகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் இருவருக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதைக்கண்ட ராகேஷ் ஏகபன் மோதலை விலக்கிவிட முயற்சித்துள்ளார். அப்போது அவரை மோதலில் ஈடுபட்ட இளைஞர் ராகேஷை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளார்.
தொடர்ந்து அவர் சண்டையிட்ட தனது தோழியையும் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்தியது ஸ்டான்லி யூஜின் என்ற நபர் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவரைப் போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது அவர் தப்ப முயன்றதால் போலீசார் சுட்டுகொன்றனர். அமெரிக்காவில் தொடர்ந்து இந்தியர்கள் கொல்லப்பட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.