மக்களை வேண்டுமென்றே தூண்டிவிட்டு போராடும் மனநிலையை திமுக ஏற்படுத்துவதாகப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கடுமையாகச் சாடியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
கரூர் விவகாரத்தில் நீதிபதியின் கருத்தை அரசியலாக்க வேண்டாம் என்றும் “மக்களை தூண்டிவிட்டு போராடும் மனநிலையை திமுக ஏற்படுத்துகிறது என்று அண்ணாமலை குறிப்பிட்டார்.
ஆளுநரை சீண்டும் வகையில் முதலமைச்சர் செயல்படுவது நல்லதல்ல என்றும் “கரூர் விவகாரத்தில் விஜய் மீது வழக்குப்பதிவு செய்தால் வழக்கு நிற்காது என்றும் அல்லு அர்ஜுன் வழக்கில் நடந்தது தான் நடக்கும் என்று அண்ணாமலை கூறினார்.
தவெக, விஜயை பாதுகாக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை என்று அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்தார்.