காசா கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க மறுத்தால் ஹமாஸ் அழிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காசாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப், 20 அம்ச திட்டத்தை முன்வைத்துள்ளார்.
அவற்றுள் ஒரு சிலவற்றை மட்டும் ஏற்றுக் கொள்வதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஹமாஸ் அமைப்புக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவொன்றை வெளியிட்டார்.
அதில், காசாவில் அமைதியை ஏற்படுத்த ஹமாஸ் உண்மையிலேயே விரும்புகிறதா என்பதை அறிய விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார்.
மேலும், காசா மீதான கட்டுப்பாட்டையும், அதிகாரத்தையும் ஹமாஸ் கைவிடாவிட்டால் அந்த அமைப்பு முழுவதுமாக அழிக்கப்பட்டு விடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.