பிரதமர் மோடி முதன்முறையாகக் குஜராத் முதலமைச்சராகப் பதவியேற்று இன்றுடன் 24 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், 2001ம் ஆண்டு இதே நாளில் தான், நான் முதன்முறையாகக் குஜராத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றேன். எனது சக இந்தியர்களின் தொடர்ச்சியான ஆசிகளுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.
ஒரு அரசாங்கத்தின் தலைவராகச் சேவை செய்யும் எனது 25-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் எனக் குறிப்பிட்ட அவர், இத்தனை ஆண்டுகளில், நமது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், நம் அனைவரையும் வளர்த்த இந்த மகத்தான தேசத்தின் முன்னேற்றத்திற்குப் பங்களிக்கவும் தான் தொடர்ந்து முயற்சித்து வந்துள்ளதாகப் பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.