சிரி ஏஐ தொழில்நுட்பம்மூலம் பயனர்களின் குரல் பதிவுகளை சேகரித்து விற்பனை செய்தது தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்திடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
பிரபலமான ஆப்பிள் ஐ-போனில் உள்ள முக்கிய அம்சம்தான் இந்தச் சிரி. பயனர்கள் கூறுவதை உள்வாங்கி ஐ-போனில் அதைச் செயல்படுத்துவதே இதன் வேலை.
இந்நிலையில் சிரி ஏஐ தொழில்நுட்பம் மூலம் பயனர்களின் அனுமதியின்றி குரல் பதிவுகளை சேகரித்து விற்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாகப் பிரான்சின் மனித உரிமைகள் அமைப்பான LDH அளித்த புகாரின் பேரில் ஆப்பிள் நிறுவனத்திடம் அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேநேரம் குற்றச்சாட்டுகுறித்து ஆப்பிள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 2019ம் ஆண்டு மற்றும் இந்தாண்டில் சிரி தனியுரிமைக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியதாகவும் சிரி உடனான உரையாடல்களை ஒருபோதும் விளம்பரதாரர்களுக்கு விற்கவில்லை எனவும் கூறியுள்ளது.