கரூர் சம்பவத்தில் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராகத் தவெக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கரூரில் கடந்த 27ம் தேதி விஜய் பரப்புரை மேற்கொண்ட இடத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்திற்கு தவெக மீதும், திமுக அரசுமீதும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் இந்தச் சம்பவத்திற்கு திமுக அரசையும், செந்தில் பாலாஜியையும் மறைமுகமாகக் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், தவெக வழக்கறிஞர் கார்த்திபன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், கரூர் துயர சம்பவத்திற்கு மாவட்ட நிர்வாகம் முறையான பாதுகாப்பு வழங்கவில்லை எனக் குற்றம்சாட்டிய அவர், மாவட்ட ஆட்சியர், எஸ்பி, காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.