ஜம்மு காஷ்மீரில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, புகழ்பெற்ற வைஷ்ணவி தேவி யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து வைஷ்ணவி தேவி கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையைக் கருத்தில் கொண்டு, அக்டோபர் 7ம் தேதி வரை வைஷ்ணவி தேவி யாத்திரை நிறுத்தப்படுவதாகவும், வானிலை சீரான பிறகு அக்டோபர் 8ம் தேதி மீண்டும் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளது.
மோசமான வானிலை காரணமாகப் பக்தர்களின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.