மேற்குவங்கத்தில் நிலச்சரிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங், சிலிகுரி உள்ளிட்ட பகுதிகளில் அதிகனமழை கொட்டியது.
12 மணி நேரத்தில், 30 செண்டி மீட்டர் மழை பதிவானதால், மேற்கு வங்கத்தின் வடக்கு பகுதியில் உள்ள மாவட்டங்கள் வெள்ளக்காடாகின.
இதைத் தொடர்ந்து ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் வீடுகள், கடைகள் அடித்துச் செல்லப்பட்டன.
இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. பலர் காணாமல் போயுள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.