நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சிக்கிம், மேற்குவங்கத்துக்கு உதவ தயார் என அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 24-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதேபோலச் சிக்கிமில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, நிலச்சரிவால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார்.
மேலும், அசாம் மற்றும் மேற்குவங்க அரசுக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.