சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நடந்த மாட்டு வண்டி பந்தயத்தின்போது மின்னல் வேகத்தில் ஓடிச்சென்ற துணை சாரதி, காரின் மேல் ஏறிக் கடந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118ஆவது பிறந்தநாள் விழா மற்றும் 68ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு, சிங்கம்புணரியில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
அப்போது, சத்யா என்ற துணை சாரதி, மாட்டு வண்டியுடன் மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தார்.
திடீரெனச் சாலையோரம் கார் நிறுத்தப்பட்டிருந்தால், வேறு வழியின்றி அவர், கார் மீது ஏறி இறங்கி, மாட்டின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடினார். இதில் காரின் மேல் பகுதி சேதமடைந்தது.