தாயின் மறைவு செய்தியை கேட்டுத் தருமபுரி நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னை திரும்பினார்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷின் தாயார் அம்சவேணி உடல்நலக்குறைவால் காலமானார்.
அவருக்கு வயது 83. வயது மூப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அம்சவேணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அம்சவேணி காலை 7.30 மணியளவில் உயிரிழந்தார். அவருடைய உடல் சாலிகிராமத்தில் உள்ள சுதீஷின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், தருமபுரியில் நடைபெறவிருந்த உள்ளம் தேடி, இல்லம் நாடி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு பிரேமலதாவும், சுதீஷும் சென்னை திரும்பினர்.
















