பாம்பே ஃபாஷன் வீக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி ராம்ப் வாக்கில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பாம்பே ஃபாஷன் வீக் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கலந்து கொண்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் ராம்ப் வாக் செய்து அசத்தினார்.
இந்நிலையில் வெறுங்காலில் பாரம்பரிய உடையில் அவரின் ரேம்ப் வாக் செய்தது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
90 களில் தனது மாடலிங் வாழ்க்கையை தொடங்கிய ஸ்மிரிதி இரானி 35 வருடங்களுக்குப் பிறகு முதல் முறையாக மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார்.
இதுகுறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.