குர்குரே வாங்குவதற்காக 20 ரூபாய் தர மறுத்ததால் தாய் மற்றும் சகோதரி மீது 8 வயது சிறுவன் காவல்நிலையத்தில் புகாரளித்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
சிங்ரௌலி மாவட்ட காவல்துறை எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய 8 வயது சிறுவன், குர்குரே வாங்குவதற்காக 20 ரூபாய் தர மறுத்துத் தனது தாயும், சகோதரியும் தன்னை கட்டி வைத்து அடித்ததாக அழுது கொண்டே புகார் தெரிவித்தார்.
சிறுவனுக்கு ஆறுதல் அளித்த போலீசார், உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.
இதையடுத்து காவல்துறை அதிகாரி உமேஷ், சிறுவனின் வீட்டிற்கு சென்று குர்குரே பாக்கெட்டுகளை வழங்கினார்.
மேலும், சிறுவனை அடிக்கக் கூடாது எனவும் குடும்பத்தினருக்கு அறிவுறுத்தினார். 8 வயது சிறுவன் அளித்த புகார் மீது காவல்துறையினர் மேற்கொண்ட அணுகுமுறை சமூக வலைதளங்களில் பாராட்டைப் பெற்று வருகிறது.