ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா சுங்கச்சாவடி அருகே, அதிவேகமாகச் சென்ற சொகுசு கார், முன்பகுதியில் சிக்கி விபத்திற்குள்ளான இருசக்கர வாகனத்தை ஒரு கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்றதால் வாகன ஓட்டிகள் அச்சத்திற்குள்ளாகினர்.
வாலாஜா டோல்கேட்டிற்கு 500 மீட்டர் முன்பாகக் கட்டுப்பாட்டை இழந்த அந்தக் கார், டோல்கேட் நோக்கி வந்த 3 இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில் 6 பேர் காயமடைந்தனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு நிலவியது.