நடிகர் கார்த்திக்கு வில்லனாக ஆதி நடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டாணாக்காரன் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகும் மார்ஷல் என்கிற திரைப்படத்தில் கார்த்தி நாயகனாக நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தாமதமாகும் எனக் கூறப்பட்ட நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரையில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
இந்நிலையில் மார்ஷல் திரைப்படத்தில் நடிகர் ஆதி வில்லனாக நடித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இறுதியாக ஆதி சப்தம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தற்போது கார்த்தியுடன் இணைந்து நடித்து வருவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
















