பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலைக் குறிவைத்து மீண்டும் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 24ம் தேதி பெஷாவர் நகரத்தில் இருந்து பலூசிஸ்தான் தலைநகர் குவேட்டவை நோக்கி ஜாஃபர் ரயில் சென்று கொண்டிருந்தது.
அப்போது தண்டவாளத்தில் குண்டு வெடித்ததில் 6 பெட்டிகள் தடம் புரண்டு 12 பேர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் மீண்டும் ஜாபர் ரயிலை குறிவைத்து வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ரயிலில் ராணுவ வீரர்கள் பயணம் செய்ததால் தாக்குதல் நடத்தப்பட்டதாகப் பலூசிஸ்தான் விடுதலைப் படை தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் காயம் அடைந்த பயணிகள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
பலூசிஸ்தானுக்கு விடுதலை கிடைக்கும் வரை இது போன்ற தாக்குதல்கள் தொடரும் எனப் பலூச் விடுதலைப் படை எச்சரித்துள்ளது.