உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் தரிசனம் மேற்கொண்டார்.
கூலி திரைப்படம் வெளியான நிலையில் இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படங்கள் சமீபத்தில் வைரலானது.
இந்நிலையில் அவர் பத்ரிநாத் கோயிலில் பத்ரி விஷால் சுவாமியை வணங்கி வழிபட்டார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.