தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் பிரசாரத்திற்கு மதுரை மாநகர் காவல்துறையினர் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளனர்.
சட்டமன்ற தேர்தலை ஒட்டி “தமிழகம் தலைநிமிரத் தமிழனின் பயணம்” என்ற பெயரில் மாநிலம் முழுவதும் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரும் 12ம் தேதி முதல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
மதுரையில் நடைபெறும் தொடக்க விழாவில், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பிரசாரத்தை தொடங்கி வைக்கவுள்ளார்.
இந்தநிலையில் மதுரை அண்ணா நகர் பகுதியில் உள்ள அம்பிகா திரையரங்கம் அருகே நிகழ்ச்சியை நடத்திக் கொள்ள மதுரை மாநகர காவல்துறை பில்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளனர்.
அதில் கூட்டத்தில் பங்கேற்கும் பெண்கள், முதியவர்களுக்குத் தனியாக இடவசதி செய்து தர வேண்டும் எனவும் கர்ப்பிணிகள், குழந்தைகளைப் பிரசார கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்க கூடாது எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சாலையின் இருபுறத்திலும் பிளக்ஸ், பேனர்கள் வைக்கக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ள காவல்துறை, குறிப்பாகச் சாலையின் நடுவில் கொடிக்கம்பங்களை நடக் கூடாது எனத் தெரிவித்துள்ளது.
பிரசார கூட்டத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள், மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமென மதுரை மாநக காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.