ராணிப்பேட்டை மாவட்டத்தில் நரிக்குறவ மக்களுக்கு வாழவே தகுதியற்ற இடத்தில் அரசு இலவச பட்டா வழங்கியுள்ளதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஆற்காடு பேருந்து நிலையம் அருகே வசித்து வந்த 30க்கும் மேற்பட்ட நரிக்குறவ மக்கள், சில மாதங்களுக்கு முன் அமைச்சர் காந்தியை சந்தித்து தங்களுக்கு இலவச பட்டா வழங்கக் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி, அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சக்கரமல்லூர் ஊராட்சிக்குட்பட்ட கன்னிகா தோப்பு பகுதியில் இலவச பட்டா வழங்கியது. ஆனால் அந்த இடமானது குண்டும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக நரிக்குறவ மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் அந்த இடத்தைச் சீரமைத்து, அரசுத் தொகுப்பு வீடுகள் கட்டி, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.