ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வானிலை மாற்றம் காரணமாக, மணாலியில் வெப்பநிலை குறைந்துள்ளதுடன், அப்பகுதியில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
மேற்கு திசை காற்று ஏற்படுத்திய தாக்கத்தால், ஹிமாச்சல பிரதேசத்தின் உயரமான மலைப் பகுதிகளில் மழை மற்றும் பனிப்பொழிவு பதிவாகி, மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை பல டிகிரி குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் அனைவரும் குளிர்காலத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.