திருச்சி அருகே உள்ள வரலாற்று சிறப்புமிக்க உய்யக்கொண்டான் கால்வாயைச் சீரமைத்து மீண்டும் விவசாயத்திற்கு வழிவகை செய்ய வேண்டும்எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள காவிரியின் தென்கரை கிராமங்களுக்கு விவசாயத் தேவைகளுக்காக ராஜராஜனின் காலத்தில் உய்யக்கொண்டான் கால்வாய் வெட்டப்பட்டது.
சுமார் 79 கிலோ மீட்டர் நீளமும், 120 கிளை வாய்க்கால்களும் உடைய இந்த கால்வாய்மூலம் 32 ஆயிரத்து 742 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதியை பெறுகின்றன.
உழவுக்கு உயிராய் ஓடிக்கொண்டிருந்த உய்யக்கொண்டான் வாய்க்காலில் கழிவுநீர் கலந்து வருவதாகவும், இதனால், உய்யக்கொண்டான் வாய்க்கால் நீரின் தன்மை முற்றிலுமாக மாறிக் கழிவுநீர் வாய்க்காலாகவே மாறி உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாநகர பகுதியில் உள்ள குடியிருப்புகள், உணவகங்கள், கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர்நேரடியாகத் திறந்து விடப்படுவதால் வாய்க்கால் முற்றிலும் மாசடைந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
மேலும், வரலாற்று சிறப்புமிக்க கால்வாயை சீரமைத்து மீண்டும் விவசாயத்திற்கு வழிவகை செய்ய வேண்டும்எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















