இண்டிகோ விமானத்தால் பயணிகள் காலதாமதத்துக்கு ஆளாவதாக நடிகை மாளவிகா மோகனன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஏன் இண்டிகோ விமான சேவையில் பத்துக்கு ஒன்பது விமானங்கள் எப்போதுமே தாமதமாகின்றன? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், விமானத்திற்குள் பயணிகளை அனுமதித்து அவர்களை உட்கார வைக்கிறோம் என்கிற பெயரில் ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதப்படுத்தும் புதிய டிரெண்டை உருவாக்குகிறீர்கள் எனவும் அவர் சாடியுள்ளார்.