கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் அதிகாரிகளின் அலட்சியமே காரணம் எனக் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அட்டப்பாடி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த சாந்தகுமார் என்பவரைக் காட்டுயானை தாக்கியது.
இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து அங்குச் சென்ற வனத்துறையினர் சம்பவம்குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது யானைகள் உலா வருவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததே உயிரிழப்புக்குக் காரணம் என அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
தொடர்ந்து தாவளம் பகுதியில் அதிகாரிகளைக் கண்டித்து பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.