மஹிந்திரா நிறுவனம் The Boss is Here என்ற பெயரில் புதிய Bolero மற்றும் Bolero Neo மாடல் கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது..
எக்ஸ்யூவி கார் தயாரிப்பில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக மஹிந்திரா நிறுவனம் விளங்கி வருகிறது. இந்நிலையில் அந்நிறுவனம் புதிய Bolero வரிசையில் The Boss is Here எனும் பிராண்டு பெயரில் மேம்படுத்தப்பபட்ட Bolero மற்றும் Bolero Neo மாடல் கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கான அறிமுக விழா சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமொபைல் பிரிவுத் தலைமை செயல் அதிகாரி நளினிகாந்த் கொல்லகுண்டா கலந்து கொண்டார்.
இந்தப் புதிய Bolero மாடலின் ஆரம்ப விலை 7 லட்சத்து 99 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் Bolero Neo மாடலின் ஆரம்ப விலை 8 லட்சத்து 49 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய நிறுவனத்தின் ஆட்டோமொபைல் பிரிவுத் தலைமை செயல் அதிகாரி நளினிகாந்த் கொல்லகுண்டா, நவீன இந்தியாவின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இந்தப் புதிய மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.