பிக் பாஸ் கன்னடா நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் விதிமுறை மீறல்கள் கண்டறியப்பட்டதை அடுத்து, பெங்களூருவில் நிகழ்ச்சி நடைபெற்று வரும் ஸ்டூடியோவை உடனடியாக மூட மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
‘ஜாலி வுட் ஸ்டுடியோஸ் & அட்வென்ச்சர்ஸ்’ என்ற வளாகத்தில் பிக் பாஸ் கன்னடா நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தது. அந்த இடத்தில் இவ்வளவு பெரிய வளாகம் கட்டுவதற்கு முறையான அனுமதி பெறவில்லை எனத் தெரிகிறது.
இதனால் ஸ்டுடியோவில் உள்ள அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என அம்மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரவை மீறினால், சம்பந்தப்பட்ட சுற்றுச்சூழல் சட்டங்களின் கீழ் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.