இந்திய விமானப்படை தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் முப்படைகளுள் ஒன்றான விமானப்படை, 1932 ம் ஆண்டு அக்டோபர் 08ம் தேதி உருவாக்கப்பட்டது.
இதனை நினைவுப்படுத்தும் விதமாகவும், விமானப்படையினரின் தியாகங்களை போற்றும் விதமாகவும் அக்டோபர் 08 ம் தேதி, இந்திய விமானப்படை தினமாக கொண்டாடப்படுகிறது.
1947ல் சுதந்திரம் பெற்றபின் இந்தியா 4 முறை பாகிஸ்தானுடனும், ஒரு முறை சீனாவுடனும் போரில் ஈடுபட்டது. இதில் விமானப்படையின் பங்கு மகத்தானது. இந்திய விமானப்படையில் 1500க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் உள்ளன.
விமானப்படை, பைட்டர்ஸ், டிரெய்னர்ஸ், டிரான்ஸ்போர்ட்ஸ், ஹெலிகாப்டர், மைக்ரோலைட்ஸ், அல்ட்ராலைட்ஸ் கிளைடர்ஸ் போன்ற பிரிவுகளாக செயல்படுகிறது.
உலகில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்திய விமானப்படை 4வது இடத்தில் பெரியதாக திகழ்கிறது.