சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்ற எம்.எஸ் பாஸ்கர் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டு தனது வேண்டுதலை நிறைவேற்றினார்.
தமிழ் திரைப்பட நடிகரான எம்.எஸ் பாஸ்கருக்கு பார்க்கிங் திரைப்படத்தில் நடித்ததற்காக, அண்மையில் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், அவர் நேற்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டு வழிபாடு நடத்தினார்.
தொடர்ந்து அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்ட நிலையில், வெளியே வந்தவரை சூழ்ந்த பக்தர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து உடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.