கரூர் துயர சம்பவம் தொடர்ப்பாக அவதூறு கருத்துக்களை பரப்பியதாக ஓய்வுபெற்ற காவல் அதிகாரியும், நேதாஜி மக்கள் கட்சி தலைவருமான வரதராஜனை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.
தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், சம்பவம் தொடர்பாக அவதூறு கருத்துக்களை பரப்பிய குற்றச்சாட்டில் வரதராஜனை போலீசார் கைது செய்தனர். மேலும், பொய்யான கருத்துக்களை பரப்பிய 25 சமூக வலைதளங்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.