அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியுடன் நாட்டைப் பாதுகாத்த விமானப்படை வீரர்களுக்கு விமானப்படை தினம் அர்ப்பணிக்கப்படுகிறது என ஏர் மார்ஷல் ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார்.
93வது விமானப்படை தினத்தை முன்னிட்டு விமானப்படை தலைவரான ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங் காணொலி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், 1932ஆம் ஆண்டு நான்கு போர் விமானங்களுடன் தொடங்கி, இந்திய விமானப்படை தற்போது உலகின் 4வது பெரிய விமானப்படையாக உருவெடுத்துள்ளது எனப் பெருமிதம் தெரிவித்தார்.
ஒவ்வொரு போரிலும், நெருக்கடி காலத்திலும் நாட்டின் பாதுகாப்பிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை விமானப்படை செய்துள்ளது என்றும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் தக்க பதிலடி கொடுத்தது எனவும் கூறியுள்ளார்.
மேலும், பொதுமக்கள் மற்றும் ராணுவ நிலைகள் மீது எதிரி நாடு தாக்குதல் நடத்த முயன்றபோது இந்திய விமானப்படை அதனை முறியடித்தது எனவும் ஏர் மார்ஷல் ஏ.வி.சிங் குறிப்பிட்டுள்ளார்.