காசாவில் இடிபாடுகளை அகற்றவே 10 ஆண்டுகள் ஆகும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கி நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனையொட்டி காசாவில் ஏற்பட்டுள்ள பேரழிவை மதிப்பீடு செய்து ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், இஸ்ரேலியத் தாக்குதல்களால் காசாவின் 80 சதவீத கட்டடங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் காசாவில் இடிபாடுகள் உள்ளிட்ட 51 மில்லியன் டன் குப்பைகள் குவிந்துள்ளன எனக் கூறியுள்ள ஐ.நா, காசாவின் வளமான நிலப்பரப்பை மீட்டெடுக்க 25 ஆண்டுகள் வரை ஆகலாம் எனத் தெரிவித்துள்ளது.