CHAT GPT-யில் தனது நண்பனைக் கொல்வது எப்படி எனக் கேட்ட அமெரிக்க மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஃபுளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 13 வயது மாணவரை பள்ளியில் அவரது நண்பர் கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மாணவன், பள்ளியில் வழங்கப்பட்ட கணினியில் CHAT GPTயிடம் தனது நண்பனைக் கொல்வது எப்படி எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது நடவடிக்கையை மாணவர் கண்காணிப்பு மென்பொருளான Gaggle கண்டறிந்து உடனடியாகப் பள்ளி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்தது.
புகாரின் பேரில் மாணவனை போலீசார் கைது செய்து சிறார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த விவகாரத்தில் பெற்றோரும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் எனப் போலீசார் எச்சரிக்கின்றனர்.
ஏனெனில் கடந்த ஏப்ரல் மாதம் கலிஃபோர்னியாவை சேர்ந்த 16 வயது சிறுவன் தற்கொலை செய்து கொள்வதற்காக CHAT GPT-யிடம் யோசனை கேட்டது குறிப்பிடத்தக்கது.