ஜெர்மனியில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் மேயர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயங்களுடன் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனியில் உள்ள ரூர் பிராந்தியத்தில் ஹெர்டெக்கே நகரில், ஒரு வாரத்திற்கு முன் ஐரிஸ் ஸ்டால்ஸர், என்பவர் புதிய மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், உடலின் பல்வேறு இடங்களில் கத்திக்குத்து காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார்.
இதனையடுத்து அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சந்தேகத்தின் பேரில் ஐரிஸ் ஸ்டால்ஸரின் 15 வயது வளர்ப்பு மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.