ராஜஸ்தானில் உடற்பயிற்சி கூடத்தில் தொழிலதிபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குச்சாமன் நகரில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் ரமேஷ் ருலானியா என்ற தொழிலதிபர் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத நபர் உள்ளே நுழைந்து துப்பாக்கியால் ரமேஷை சுட்டுவிட்டு தப்பியோடினார்.
படுகாயம் அடைந்த ரமேஸை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சில நாட்களுக்கு முன்பு ரோஹித் கோதாரா என்ற ரவுடியிடம் இருந்து ரமேஸுக்கு மிரட்டல் வந்ததாகக் கூறப்படுகிறது.
பிரபல பாடகர் சித்த மூஸ்வாலாவின் கொலை வழக்கில் கோதாராவின் பெயர் அடிபட்டது. அதன் அடிப்படையில் தொழிலதிபர் ரமேஸ் கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.