அரசு முறைபயணமாக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் நாளைப் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.
இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர், 2 நாட்கள் அரசு முறைப்பயணமாக லண்டனில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை இந்தியா வந்தடைந்தார்.
மும்பை விமான நிலையத்திற்கு வந்தடைந்த அவரை மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் வரவேற்றனர்.