உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் இந்திய விமானப்படை தின அணிவகுப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
இந்திய விமானப்படை 93 வது ஆண்டை நிறைவு செய்து 94 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இதையொட்டி உத்தரபிரதேசத்தின் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் விமானப்படையின் அணி வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் முப்படை தளபதி அனில் சவுகான், விமானப்படை தளபதி அமர்ப்ரீத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் விமானப்படை தளபதி அமர்ப்ரீத் சிங் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமர்ப்ரீத் சிங், போரில் சிறப்பாகச் செயல்பட்டதை தாண்டி, இந்திய விமானப்படை வீரர்கள் வெளிநாட்டிலும் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளில் பங்கெடுத்துத் திறமையை நிரூபித்ததாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் நமது விமானப்படை வீரர்கள் ஒவ்வொரு சகாப்தத்திலும் வரலாற்று சாதனை படைத்துள்ளதாக அமர்ப்ரீத் சிங் பெருமிதம் தெரிவித்தார்.