திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் உள்ள தனியார் கலை கல்லூரியில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பாகப் பட்டாசுகள் வெடிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி மைதானத்தில் ‘அக்னி இல்லா தீபாவளி’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட தீயணைப்புத் துறை சார்பில் மாணவர்களுக்குப் பாதுகாப்பாகப் பட்டாசுகள் வெடிப்பது குறித்த விழிப்புணர்வும், செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து மாணவ, மாணவிகள் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின் படி பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்தனர்.